​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவ.18ந் தேதி தொடங்கும் என தகவல்

Published : Oct 17, 2019 6:07 AM



நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவ.18ந் தேதி தொடங்கும் என தகவல்

Oct 17, 2019 6:07 AM

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 18ம் தேதி தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. டிசம்பர் 13ம் தேதி வரை இந்த தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற விவகாரத்திற்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நேற்றிரவு நடைபெற்றது. மத்திய அமைச்சர்களான அமித்ஷா, பிரகாஷ் ஜவடேகர், தாவர்சந்த் கெஹ்லோட்,பிரகலாத் ஜோஷி ஆகியோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வேண்டிய முக்கிய மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நவம்பர் 18ந் தேதி தொடங்கி டிசம்பர் 13 வரை கூட்டத் தொடரை நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அடுத்த வாரம் நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.