​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சவுதி மன்னருக்கு வேட்டைக் கழுகை பரிசளித்த புதின்

Published : Oct 17, 2019 6:03 AM



சவுதி மன்னருக்கு வேட்டைக் கழுகை பரிசளித்த புதின்

Oct 17, 2019 6:03 AM

சவுதி சென்றுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அந்நாட்டு மன்னருக்கு வேட்டைக் கழுகு ஒன்றினை பரிசளித்துள்ளார்.

12 ஆண்டுகளுக்குப் பின் சவுதி சென்றுள்ள புதின், அந்நாட்டு மன்னர் முகம்மது பின் சல்மானுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் கச்சா எண்ணெய் குறித்து இருதரப்பு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதையடுத்து ராஜாளி வகையைச் சேர்ந்த பழுப்புக் கழுகை சல்மானுக்கு, புதின் பரிசளித்தார். பதிலுக்கு ஓவியம் ஒன்றினை புதினுக்கு, சல்மான் பரிசாகக் கொடுத்தார். சவுதி மன்னர் குடும்பத்தினர் கழுகுகளை வைத்து வேட்டையாடும் பழக்கம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.