​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
11ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அடித்துக் கொலை

Published : Oct 16, 2019 7:29 PM

11ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அடித்துக் கொலை

Oct 16, 2019 7:29 PM

மதுரையில் 11ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலை தொடர்பாக 2 சகோதரர்கள் சரண் அடைந்துள்ளனர்.

செல்லூரை சேர்ந்த பால்பாண்டி என்பவர், கோவில் திருவிழாவிற்காக சொந்த ஊரான ஓணாப்பட்டிக்கு சென்றுள்ளார். அங்கு தனது மகள் சந்தியாவை உறவினர் வீட்டில் தங்க வைத்து வந்துள்ளார். இதற்கிடையே ஊருக்கு அருகே உள்ள தோட்டத்தில் குளித்துவிட்டு வருதாக சென்ற சந்தியா காணாமல் போயுள்ளார்.

நீண்ட தேடுதலுக்கு பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை தலையில் பலத்த காயங்களுடன் சந்தியாவின் சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து சேடப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த இளைஞர் மாதவன் காவல் நிலையில் சரண் அடைந்தார்.

அப்போது தானும் உயிரிழந்த மாணவி சந்தியாவும் காதலித்து வந்ததாக அவர் கூறியுள்ளார். திருமணம் செய்ய மறுத்ததால் சந்தியாவை தனது சகோதரர் மதுவுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கல்லால் தலையில் அடித்து கொலை செய்ததாகவும் மாதவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் கொலை தொடர்பாக மாதவனின் தம்பி மது உசிலம்பட்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.