​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிலக்கரி சாம்பலை அகற்றுவதற்கான டெண்டரை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

Published : Oct 16, 2019 6:41 PM

நிலக்கரி சாம்பலை அகற்றுவதற்கான டெண்டரை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

Oct 16, 2019 6:41 PM

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி சாம்பலை அப்புறப்படுத்துவதற்காக அனுபவமில்லாதவர்களுக்கு வழங்கும் விதத்தில் விதிகளை மாற்றி விடப்பட்டுள்ள டெண்டரை ரத்து செய்யக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்கு விசாரணையில் அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டெண்டர் நடவடிக்கைகளில் பங்கேற்காத ரவிச்சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், ஏற்கனவே இதே டெண்டரை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் வாதிட்டார்.

மேலும், அனல் மின் நிலையங்களில் உற்பத்தியாகும் நிலக்கரி சாம்பலை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என மத்திய அரசும், மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளும் அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். இதையடுத்து இந்த டெண்டரில் நீதிமன்றம் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.