​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காங்கிரசின் ஊழல்களால் மகாராஷ்ட்ரா மாநிலம் சீரழிந்து விட்டது - பிரதமர் மோடி

Published : Oct 16, 2019 6:39 PM

காங்கிரசின் ஊழல்களால் மகாராஷ்ட்ரா மாநிலம் சீரழிந்து விட்டது - பிரதமர் மோடி

Oct 16, 2019 6:39 PM

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஊழல்வாத கூட்டணி என பிரதமர் மோடி குற்றச்சாட்டி உள்ளார்.

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி பா.ஜனதா - சிவசேனா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அவர் அகோலா என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் ஊழல்வாத கூட்டணி என்றார்.

இந்த கூட்டணி 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து மகாராஷ்டிரா மாநிலத்தை சீரழித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டினார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்தது குறித்து காங்கிரஸ் கூட்டணியினர் மகாராஷ்டிரா தேர்தலில் பிரச்சினை எழுப்புவது மிகவும் அவமானகரமானது என்று அவர் குறிப்பிட்டார்.

காஷ்மீர் விவகாரம் மகாராஷ்டிரா தேர்தலில் எந்தவிதத்திலும் பாதிக்காது என்ற அவர், வீர சாவர்க்கர் இந்த நாட்டுக்காக பெரும்பாடுபட்டவர் என்றார். தேசியத்தை ஊக்குவித்த அவர், பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர் என்று மோடி தெரிவித்தார்.