​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் : உயர்நீதிமன்றம்

Published : Oct 16, 2019 6:03 PM

பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் : உயர்நீதிமன்றம்

Oct 16, 2019 6:03 PM

பொது நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இல்லாவிட்டால், முறைகேடுகளையும்,சட்ட விரோத நடவடிக்கைகளையும் வெளிக்கொண்டு வரமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தில் படித்த பவன்குமார் காந்தி என்பவர் தனது தேர்வு நகல்களை வழங்ககோரி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தார். ஆனால் அந்த தகவல்கள் வழங்கப்படாததால் மாநில தகவல் ஆணையத்தில் விண்ணப்பித்தார்.

அந்த விண்ணப்பத்தை பரீசிலீத்த தகவல் ஆணையம் பவன்குமார் காந்தி கோரிய விவரங்களை வழங்க சட்ட பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு சட்ட பல்கலைக்கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யபட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கும் தகவல்களை வழங்க வேண்டும் என பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டார்.

தகவல் பெறும் உரிமை சட்டம் அரசு நிர்வாக நடவடிக்கைகளுக்கு அரசு அதிகாரிகளை பொறுப்பாக்குகிறது என தெரிவித்த நீதிபதி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கபட்ட விண்ணப்பங்களை விரைந்து முடித்து வைக்கவேண்டும் என பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.