​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொடர்ந்து 4வது தினமாக ஏறுமுகத்தில் வர்த்தகம்

Published : Oct 16, 2019 5:35 PM

தொடர்ந்து 4வது தினமாக ஏறுமுகத்தில் வர்த்தகம்

Oct 16, 2019 5:35 PM

இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து 4 வது நாளாக வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 92 புள்ளிகள் உயர்ந்து 38 ஆயிரத்து 598 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 92 புள்ளிகள் உயர்ந்து, 11 ஆயிரத்து 464 புள்ளிகளாக அதிகரித்தது. குறிப்பாக வங்கிகள், நிதி நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன.

நிறுவனங்கள் இரண்டாவது காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு வரும் நிலையில், சந்தை தொடர்ந்து 4 தினங்களாக ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து 71 ரூபாய் 44 காசுகளாக உள்ளது.