​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொசுப்புழுக்கள் உருவாவதற்கான காரணிகள் தென்பட்டால் அபராதம் விதிக்கப்படும் - சுகாதாரத்துறை

Published : Oct 16, 2019 4:53 PM



கொசுப்புழுக்கள் உருவாவதற்கான காரணிகள் தென்பட்டால் அபராதம் விதிக்கப்படும் - சுகாதாரத்துறை

Oct 16, 2019 4:53 PM

டெங்கு ஒழிப்பு குறித்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளும்போது, கொசுப்புழுக்கள் உருவாவதற்கான காரணிகள் தென்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை டெங்கு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதையொட்டி, சுகாதாரத்துறை இயக்குநகரகம் மூலம் மாவட்டந்தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அரசு கட்டிடம், தனியார் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

ஆய்வின்போது கொசுப்புழுக்கள் உருவாவதற்கான காரணிகள் தென்பட்டால் பாராபட்சம் இன்றி அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.