​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தெலங்கானா முதலமைச்சரின் பண்ணை வீட்டில் தலைமைக் காவலர் தற்கொலை

Published : Oct 16, 2019 4:40 PM

தெலங்கானா முதலமைச்சரின் பண்ணை வீட்டில் தலைமைக் காவலர் தற்கொலை

Oct 16, 2019 4:40 PM

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் பண்ணை வீட்டில், பணியில் இருந்த தலைமைக் காவலர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சித்திபேட் மாவட்டத்தில் உள்ள எர்ரவல்லி பகுதியில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் பண்ணை வீடு அமைந்துள்ளது. அங்கு வெங்கடேஷ்வரலு என்ற தலைமை காவலர், காவல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென துப்பாக்கியால் தன்னைத்தானே அவர் சுட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பணியிலிருந்த மற்றொரு போலீஸ்காரர் வெங்கடேஷ்வரலுவை மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில் அவர் இறந்ததை மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர்.

மதுப்பழக்கத்துக்கு அடிமையானவராக கூறப்படும் வெங்கடேஷ்வரலு, குடியை நிறுத்துவதற்கான சிகிச்சை மேற்கொள்ள கடந்த ஒரு மாத காலமாக விடுப்பில் சென்றுவிட்டு தற்போதுதான் பணிக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.