​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொழிலதிபர் கடத்தல் - பெண் காவல் ஆய்வாளர் உட்பட மூவர் சஸ்பெண்ட்

Published : Oct 16, 2019 2:36 PM

தொழிலதிபர் கடத்தல் - பெண் காவல் ஆய்வாளர் உட்பட மூவர் சஸ்பெண்ட்

Oct 16, 2019 2:36 PM

கன்னியாகுமரி அருகே கிடைக்காத தங்க புதையலில் பங்கு கேட்டு தொழிலதிபர் கடத்தப்பட்ட விவகாரத்தில் கருங்கல் பெண் ஆய்வாளர் உட்பட மூன்று காவலர்களை பணி இடை நீக்கம் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினவ் உத்தரவிட்டுள்ளார்.

குளச்சல் அருகே தொழிலதிபர் ஜெர்லின் என்பவரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கூலிப்படையைச் சேர்ந்த சுரேஷ்குமார்,ஜெயன்ராபி, கிருஷ்ணகுமார் ஆகியோர் செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தொழிலதிபர் கடத்தப்பட்ட விவகாரத்தில் கருங்கல் காவல் ஆய்வாளர் பொன்தேவி, துணை ஆய்வாளர் ரூபன் ஜெயதிலக் மற்றும் தலைமைக்காவலர் ஜெரோம் ஜோன்ஸ் உள்ளிட்டோர் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, கருங்கல் பெண் காவல் ஆய்வாளர் பொன்தேவி உள்ளிட்ட மூவரையும் சஸ்பெண்ட் செய்து டிஐஜி பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவான பெண் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.