​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடை முன் நிறுத்தப்பட்டிருந்த Yamaha R15 இருசக்கர வாகனம் திருட்டு

Published : Oct 16, 2019 12:14 PM

கடை முன் நிறுத்தப்பட்டிருந்த Yamaha R15 இருசக்கர வாகனம் திருட்டு

Oct 16, 2019 12:14 PM

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இரண்டு பேரை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

செம்போடை பகுதியில் முனியப்பன் என்பவர் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவர் 20 நாட்களுக்கு முன்பு புதிதாக வாங்கிய Yamaha R15 இருசக்கர வாகனத்தை நேற்றிரவு கடைக்கு வெளியே நிறுத்தி விட்டு கடைக்குள் தூங்கியுள்ளார்.

காலையில் எழுந்து பார்த்த பொழுது இருசக்கர வாகனம் திருடு போனது தெரியவந்துள்ளது. இதனால் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை வேதாரண்யம் போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது நள்ளிரவில் வந்த இரண்டு பேர் முனியப்பனின் இருசக்கர வாகனத்தை சைடு லாக்கை உடைத்து திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. சிசிடிவி காட்சியில் உள்ள திருடர்களின் உருவத்தை வைத்து வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.