​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிமுக கட்சியின் 48 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அறிக்கை

Published : Oct 16, 2019 12:11 PM



அதிமுக கட்சியின் 48 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அறிக்கை

Oct 16, 2019 12:11 PM

அதிமுக 48 வது ஆண்டில் அடியெடுக்க உள்ள நிலையில், அக்கட்சியின் ஆட்சியில் தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி தேசிய சராசரியை விட 8 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கி 47 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூட்டாக தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், அதிமுக ஆட்சியில் சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பில் தமிழ்நாடு சிறந்த மாநிலம் என்று மெய்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலத்தின் மொத்த உற்பத்தி தேசிய சராசரியை விட 8 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொன்னான தருணத்தில் அதிமுகவின் அரசியல் பணிகளை அனைவரும் நிலைவில் கொள்ளும்படி நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மகத்தான வெற்றிபெற உழைத்திடுவோம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், ’உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றிப்பெற்று மக்கள் தொண்டாற்ற நமது பணிகளை தொடங்குவோம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.