​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆவின் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலை நிறுத்தம் வாபஸ்

Published : Oct 15, 2019 9:21 PM

ஆவின் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலை நிறுத்தம் வாபஸ்

Oct 15, 2019 9:21 PM

வாடகை நிலுவைத் தொகை கேட்டு ஆவின் பால் லாரி உரிமையாளர்கள் அறிவித்திருந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களாக ஆவின் பால் டேங்கர் லாரிகளுக்கு வாடகைத் தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து சுமார் 20 கோடி ரூபாய் அளவிலான வாடகை நிலுவைத் தொகையை கேட்டு அக்டோபர் 16ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஆவின் பால் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இதனால் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில், சேலம் ஆவின் நிறுவன அலுவலகத்தில் வைத்து ஆவின் பொது மேலாளர் விஜய்பாபு தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.