​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகள் கொள்ளை

Published : Oct 15, 2019 8:09 PM

வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகள் கொள்ளை

Oct 15, 2019 8:09 PM

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகள் கொள்ளை அடித்த கும்பலை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முரளி. இவர் ஏழுமலையானை தரிசிக்க குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றுள்ளார்.

இதனை பயன்படுத்திக் கொண்ட நான்கு பேர் கொண்ட கொள்ளை கும்பல், நேற்றிரவு முரளி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று 20 சவரன் நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளது.

முரளியின் பக்கத்து வீட்டிலும் கொள்ளை கும்பல் கைவரிசை காட்ட முயன்றுள்ளது. அந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவானது.