​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொழில்துறையில் முதலீடுகளை ஈர்க்க , ஒரே இடத்தில் அனைத்து அனுமதிகளையும் பெறும் திட்டம் அமல்

Published : Oct 15, 2019 8:00 PM

தொழில்துறையில் முதலீடுகளை ஈர்க்க , ஒரே இடத்தில் அனைத்து அனுமதிகளையும் பெறும் திட்டம் அமல்

Oct 15, 2019 8:00 PM

தொழில்துறையில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஒரே இடத்தில் அனைத்து அனுமதிகளையும் பெறுவதற்கான, புதிய ஒற்றை சாளர முறை விரைவில் அமல்படுத்தப்படவுள்ளதாகவும், இதன் மூலம் 54 வகையான சேவைகளை அளிக்கவுள்ளதாகவும், தொழில்துறை செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறையும், இந்திய தொழில்துறை கூட்டமைப்பும் இணைந்து இந்தியா மற்றும் கம்போடியா, லாவோ, மியான்மர், வியட்நாம் இடையாயான முதலாவது வர்த்தக மாநாடு, கிண்டியில் உள்ள ஐ.டி.சி சோலா நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் Cambodiya, Laos, Myanmar, Vietnam எனும் CLMV மண்டலத்தில் இந்தியாவில் இருந்து வேளாண்துறை சார்ந்த தொழில்கள், ஆட்டோமொபைல், சுகாதாரம் மற்றும் மருந்து தயாரிப்பு, ரசாயணம், பெட்ரோ கெமிக்கல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்வது தொடர்பான கருத்தரங்கம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

முதல்நாள் மாநாட்டில் பங்கேற்று பேசிய தொழில் துறையின் முதன்மை செயலாளர் முருகானந்தம், தமிழ்நாட்டுக்கும் தெற்கு ஆசிய நாடுகளுக்கும் பண்டையகால தொடர்பு இருப்பதாகவும், 1000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்துக்கும் தெற்கு ஆசிய நாடுகளுக்கு இடையே கடல்வழி வர்த்தகம் நடைபெற்றிருப்பதாக கூறினார்.

20 ஆம் நூற்றாண்டு அமெரிக்காவின் நூற்றாண்டாக இருந்ததாகவும், 21 ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டாக இருக்கப்போவதாக தெரிவித்த அவர், வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் வரும் ஆண்டுகள் இந்தியா மற்றும் CLMV மண்டல நாடுகளுக்கு சிறப்பாக இருக்கபோவதாக தெரிவித்தார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக தைவான் மற்றும் சீனாவுக்கு வரும் 22 ஆம் தேதி அதிகாரிகள் செல்ல இருப்பதாக முதன்மை செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.