​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மகாராஷ்டிரா தேர்தல் : பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

Published : Oct 15, 2019 6:42 PM

மகாராஷ்டிரா தேர்தல் : பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

Oct 15, 2019 6:42 PM

வருகிற 21ஆம் தேதி சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கான தேர்தல் அறிக்கையை, பாரதிய ஜனதா கட்சி இன்று வெளியிட்டிருக்கிறது.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக செயல் தலைவர் JP நட்டா, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபத்னாவிஸ் உள்ளிட்டோர், பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

அதில், அடுத்த 5 ஆண்டுகளில், சூரிய ஆற்றல் மூலம் விவசாயத்திற்கு தடையற்ற மின்சாரம் உறுதி செய்யப்படும், மாகாராஷ்டிரா மாநிலத்தில், ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், பெண்கள் சேமிப்பு குழுக்களின் மூலம் ஒரு கோடி குடும்பங்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கூறப்பட்டிருக்கிறது.

2022ஆம் ஆண்டிற்குள், 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளும், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்றன.