​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உதகை மலை ரயிலின் 111வது ஆண்டு நிறைவு விழா

Published : Oct 15, 2019 6:26 PM

உதகை மலை ரயிலின் 111வது ஆண்டு நிறைவு விழா

Oct 15, 2019 6:26 PM

உதகை மலை ரயிலின் 111வது ஆண்டு நிறைவு விழா பயணிகளுடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து உதகமண்டலம் வரையுள்ள பசுமையும் அழகும் சூழ்ந்த மலைப்பாதையில் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 1908ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி தனது சேவையைத் தொடங்கிய மலைரயில் செவ்வாய்க் கிழமையுடன் 111ஆம் ஆண்டை நிறைவு செய்கிறது.

இதனையொட்டி மலை ரயில் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. குன்னூரில் இருந்து மலை ரயில் மூலம் உதகை வந்த பயணிகளுக்கு பூங்கொத்துகளும் இனிப்புகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து ரயில்நிலைய மேலாளர், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு கேடயங்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மலை ரயில் பாதுகாப்பு அறக்கட்டளையைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.