​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலி

Published : Oct 15, 2019 5:16 PM

சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலி

Oct 15, 2019 5:16 PM

ஆந்திர மாநிலம் மரேடுமில்லி அருகே, மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து, 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கர்நாடகாவைச் சேர்ந்த சிலர், தெலங்கானா மாநிலம் பத்ராசலம் கோதண்டராம சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, ஆந்திராவிலுள்ள ராஜமகேந்திரவரம் நோக்கி டெம்போ டிராவலர் வாகனத்தில் சென்றுள்ளனர்.

கிழக்கு கோதாவரி மாவட்டம் மரேடுமில்லி மலைப்பாதையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த வேனானது, சாலைத் தடுப்பில் மோதி, பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் வேன் முழுவதுமாக உருக்குலைந்து, சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்த 4 பேர் போலீசாரால் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.