​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு பரோல் கேட்டு அவரது தாய் நீதிமன்றத்தில் மனு

Published : Oct 15, 2019 5:06 PM

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு பரோல் கேட்டு அவரது தாய் நீதிமன்றத்தில் மனு

Oct 15, 2019 5:06 PM

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு பரோல் கோரிய வழக்கில் 3 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க சிறைத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 


ரவிச்சந்திரனின் தாய் ராஜேஸ்வரி தாக்கல் செய்த மனுவில், தனது மகனுக்கு பரோல் கேட்டு 2018 டிசம்பரில் வழக்கு தொடர்ந்த போது நீண்டகால பரோல் வழங்குவது சாத்தியம் இல்லை என்றும் புதிதாக மனுத்தாக்கல் செய்தால், ஒரு மாதம் பரோல் வழங்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் சுட்டிக் காட்டப்பட்டது.


அதனடிப்படையில் கடந்த மார்ச் 27ஆம் தேதி ரவிச்சந்திரனுக்கு ஒரு மாதம் பரோல் கோரி மனு அளித்தும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என்றும் எனவே பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுவை 3 வாரத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்க சிறைத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்