​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
1.5 லட்சம் இ-சலான்களை திரும்பப் பெற டெல்லி போலீஸ் முடிவு

Published : Oct 15, 2019 4:43 PM

1.5 லட்சம் இ-சலான்களை திரும்பப் பெற டெல்லி போலீஸ் முடிவு

Oct 15, 2019 4:43 PM

விதிமுறைகளை மீறியதாக வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்ட ஒன்றரை லட்சம் இ-சலான்களை திரும்பப் பெற டெல்லி போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மணிக்கு 60 கிலோ மீட்டர் என்று நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சென்றதாக வாகன ஓட்டிகளுக்கு இ-சலான் மூலம் அபாரதம் விதிக்கப்பட்டது.

ஆனால் நெடுஞ்சாலையில் பொதுப்பணித்துறை வைத்துள்ள அறிவிப்பு பலகையில் அதிகபட்ச வேகம் 70 கிலோ மீட்டர் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக அபாரதம் விதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

விதிமுறை எதையும் மீறாத நிலையில் தங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை வழங்கப்பட்ட இ-சலான்கள் அனைத்தையும் திரும்பப் பெற டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆனால் வசூலிக்கப்பட்ட அபாரதத் தொகையின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள டெல்லி போலீசார், அதிகபட்ச வேகத்தை 60 கிலோ மீட்டராக மாற்ற சொல்லியும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாற்றாததே இந்த குளறுபடிக்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர்.