​​ அரவிந்தர் ஆசிரமத்திற்கு பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு - இரண்டு சகோதரிகள் கொலை மிரட்டல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரவிந்தர் ஆசிரமத்திற்கு பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு - இரண்டு சகோதரிகள் கொலை மிரட்டல்

அரவிந்தர் ஆசிரமத்திற்கு பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு - இரண்டு சகோதரிகள் கொலை மிரட்டல்

Feb 24, 2018 3:45 PM

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக, ஏற்கனவே தற்கொலைக்கு முயன்ற இரண்டு சகோதரிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

பீகாரைச் சேர்ந்த ஹேமலதா, நிவேதிதா மற்றும் அவர்களின் பெற்றோர்கள், சகோதரிகள் ஆகியோர் கடந்த 2014ஆம் ஆண்டு அரவிந்தர் ஆசிரம நிர்வாகத்திற்கு எதிராக புகார் கொடுத்ததால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தங்களது புகார் குறித்து விசாரிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர்கள் 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலாப்பட்டு கடலில் தற்கொலைக்கு முயன்றனர்.

இதில் ஹேமலதா மற்றும் நிவேதிதா காப்பற்றப்பட்ட நிலையில் அவர்களின் தாயார் மற்றும் இரண்டு சகோதரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனாலும் தொடர்ந்து அரவிந்தர் ஆசிரமத்திற்கு எதிராக இருவரும் போராடி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி ஆசிரமத்திற்கு வருவதால் தங்கள் புகார் மீது நடவடிக்கை இருக்காது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களின் எதிர்ப்பை மீறி பிரதமர் வந்தால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.