​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

Published : Oct 15, 2019 3:45 PM

தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

Oct 15, 2019 3:45 PM

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தீபாவளிப் பண்டிகை  வரும் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

சொந்த ஊர்களில் தீபாவளியை கொண்டாட விரும்புவோரின் வசதியைக் கருதி வரும் 24-ஆம் தேதி முதல் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

அதன்படி தாம்பரம் - நெல்லை இடையே அக்டோபர் 24-ஆம் தேதி இரவு 8.50 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகை முடிந்து திரும்புவோரின் வசதிக்காக நெல்லை - தாம்பரம் இடையே அக்டோபர் 28-ஆம் தேதி இரவு 9.40 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நாகர்கோவில் - தாம்பரம் இடையே வரும் 29-ஆம் தேதி பிற்பகல் 12.55 மணிக்கும் தாம்பரம் - திருச்சி இடையே அக்டோபர் 30ந் தேதி காலை 6 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.