​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சூப்பர் மார்க்கெட்டில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செண்ட் பாட்டில்களை திருடிய தம்பதியினர்

Published : Oct 15, 2019 3:14 PM

சூப்பர் மார்க்கெட்டில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செண்ட் பாட்டில்களை திருடிய தம்பதியினர்

Oct 15, 2019 3:14 PM

சென்னை பூந்தமல்லியில் சூப்பர் மார்க்கெட்டில் தம்பதி போல் நடித்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செண்ட் பாட்டில்களை திருடிய இருவர் சிக்கினர்

டிரங்க் ரோட்டில் ரெடி பாஸ்கெட் என்ற பெயரில் சூப்பர் மார்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த மாதம் பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான செண்ட் பாட்டில்கள் திருடப்பட்டன.

கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் சேர்ந்து கைவரிசை காட்டியது தெரியவந்தது. இது குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மீண்டும் கடைக்கு வந்த அந்த இருவரும் ஊழியர்களிடம் சிக்கிக் கொண்டனர்.

அதன் பிறகு இருவரும் பூந்தமல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மதுரையை சேர்ந்த முருகன் என்கிற நாகப்பன் மற்றும் லட்சுமி என்பதும், இருவரும் கணவன் மனைவி போல் நடித்து கடைகளில் கைவரிசை காட்டி வந்ததும் தெரியவந்துள்ளது.