​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பண்டிகையை முன்னிட்டு திருடர்களின் கைவரிசையை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை

Published : Oct 15, 2019 1:33 PM

பண்டிகையை முன்னிட்டு திருடர்களின் கைவரிசையை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை

Oct 15, 2019 1:33 PM

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தியாகராயநகர் உள்ளிட்ட இடங்களில் திருடர்களை பல்வேறு வகை காமிராக்கள் மூலம் கண்காணித்துப் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வடக்கு மற்றும் தெற்கு உஸ்மான் சாலைகள், ரங்கநாதன் தெரு, உள்ளிட்ட இடங்களில் கூடுதல் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாம்பலம் ரயில் நிலையம், போத்தீஸ்,  ரங்கநாதன் தெரு சந்திப்பு ஆகிய இடங்களில் 3 ஃபேஸ் டிடெக்டர் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அவற்றில் சந்தேக நபர்களின் முகங்களை எளிதில் அடையாளம் காண முடியும். மேலும் போலீசாரின் உடலோடு பொருத்தப்படும் கேமாரக்களும் வழங்கப்பட்டுள்ளன.  தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை மற்றும் ஆயுதப்படை போலீசார் சுமார் 60 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த எண்ணிகை அதிகரிக்கப்படவுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். புரசைவாக்கம், பாரிமுனை உள்ளிட்ட இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக கூறியுள்ளனர்.