​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அண்ணா பல்கலைக்கழகத்திற்கான மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து...

Published : Oct 15, 2019 1:10 PM

அண்ணா பல்கலைக்கழகத்திற்கான மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து...

Oct 15, 2019 1:10 PM

தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில், Institution of Eminence எனப்படும் மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்தை செயல்படுத்த, மத்திய அரசுக்கு, உயர்கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளதாக, அதன் முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் நடைபெற்ற, ஆராய்ச்சி படிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். Institution of Eminence அந்தஸ்து வழங்கப்பட்டாலும் மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் அண்ணா பல்கலைக் கழகம் தொடர்ந்து செயல்படும் என்றும், தமிழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாகவும் மங்கத் ராம் சர்மா தெரிவித்திருக்கிறார்.

விரிவுரையாளர். பேராசிரியர் பணியிடங்களுக்கு, மாணவர்கள் UGC NET அல்லது SET அல்லது  SLET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றாலும், Ph.D., படிப்பையும் முடிக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா கூறியிருக்கிறார்.