​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒடிசாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட சிறுமி உயிரிழந்தார்

Published : Apr 30, 2018 6:00 PM

ஒடிசாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட சிறுமி உயிரிழந்தார்

Apr 30, 2018 6:00 PM

ஒடிசாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, இரக்கமற்ற முறையில் தாக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வந்த நிலையில், உயிரிழந்தார். கடந்த 21ஆம் தேதி ஜெகன்நாத்பூர் என்ற கிராமத்தில் பள்ளி வளாகத்துக்குள் வைத்து 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதே கிராமத்தைச் சேர்ந்த முகமது முஸ்டாக் என்பவன் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டான்.

இதனிடையே தலையில் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த சிறுமி, நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.