​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராணிப்பேட்டை அருகே மாயமான 10ம் வகுப்பு மாணவர்கள் 3 பேரை தேடும் பணி தீவிரம்

Published : Oct 15, 2019 11:27 AM

ராணிப்பேட்டை அருகே மாயமான 10ம் வகுப்பு மாணவர்கள் 3 பேரை தேடும் பணி தீவிரம்

Oct 15, 2019 11:27 AM

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே மாயமான 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

சிப்காடு அருகே உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் நவீன்குமார், மோகன்குமார், தருஷ்குமார் படிப்பில் பின்தங்கியிருந்ததால் ஆசிரியர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாணவர்கள் 3 பேரும் பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை என பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுவட்டாரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் உதவியோடு மாணவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.