​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்புவனம் அருகே ரூ. 50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

Published : Oct 15, 2019 11:22 AM

திருப்புவனம் அருகே ரூ. 50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

Oct 15, 2019 11:22 AM

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ரூ. 50 லட்சம் மதிப்புள்ள  செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

கிளாதரி அருகே மணப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த சின்ன கருப்பு, வீர லட்சுமி ஆகியோர் தங்களுக்கு சொந்தமான வீட்டில்
செம்மரக்கட்டைகளை இயந்திரம் கொண்டு துண்டுதுண்டாக நறுக்கி நைசாக இளைத்து சாக்கு மூட்டையில் கட்டி வெளிநாட்டுக்கு கடத்தி வருவதாகவும், இளைக்கும் துகள்களை நாட்டு மருந்துக்கு பயன்படுத்த அனுப்பி வைப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போலீசார் 16 க்கும் மேற்பட்ட செம்மரக்கட்டை மூட்டைகளைக் கைப்பற்றி சிவகங்கை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். போலீசார் வருவதையறிந்து தப்பியோடிய சின்னகருப்பு குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.