​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Published : Oct 15, 2019 10:38 AM

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Oct 15, 2019 10:38 AM

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அமிர்தலிங்கம்  என்பவரின் மகள் நந்தினி காய்ச்சல் கரணமாக கொத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையிலும், திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட நிலையில் காய்ச்சலின் தீவிரம் குறையாததால்  சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் வழியிலேயே நந்தினி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களில் திருத்தணி வட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் ஒரு குழந்தை காய்ச்சலுக்கு பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.