​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலீசார் விசாரணைக்கு அழைத்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்?

Published : Oct 15, 2019 9:57 AM

போலீசார் விசாரணைக்கு அழைத்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்?

Oct 15, 2019 9:57 AM

சென்னை மாதவரம் அருகே போலீசார் விசாரணைக்கு அழைத்ததால் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

பொன்னியம்மன்மேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதில் வெங்கடேசன் ரமேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மாதவரம் காவல் துறையினர் ரமேஷுக்கு போன் செய்து விசாரணைக்காக காவல் நிலையம் வர வற்புறுத்தியதால் அச்சமடைந்த ரமேஷ் தான் சாகப் போவதாக தனது நண்பருக்கு தகவல் தெரிவித்து விட்டு வில்லிவாக்கம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகக் சொல்லப்படுகிறது. இது தொடர்பான ஆடியோவும் வெளியாகியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வெங்கடேசனைக் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.