​​ குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவிற்கு முதல் தங்கம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவிற்கு முதல் தங்கம்

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவிற்கு முதல் தங்கம்

Feb 24, 2018 3:26 PM

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவிற்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது. தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இதில், பிகர் ஸ்கேட்டிங் (( figure skating )) போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியில், ரஷ்ய வீராங்கனை அலினா ஜகிடோவா (( alina zagitova )) தனது உடலை ரப்பர் போல் வளைத்து, வியக்கவைக்கும் திறமையை வெளிப்படுத்தினார். நொடிப்பொழுதும் சோர்வடையாமல், பம்பரம் போல் சுழன்ற அலினா ஜகிடோவா, 239 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். வெள்ளிப்பதக்கத்தையும் சக நாட்டு வீராங்கனை வென்றார்.