​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மோடி - ஜின்பிங் மாமல்லபுர சந்திப்பு தமிழகத்திற்கு கிடைத்த பெருமை

Published : Oct 14, 2019 7:25 PM

மோடி - ஜின்பிங் மாமல்லபுர சந்திப்பு தமிழகத்திற்கு கிடைத்த பெருமை

Oct 14, 2019 7:25 PM

இந்தியா- சீனா இடையிலான பேச்சுவார்த்தை மாமல்லபுரத்தில் நடைபெற்றது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணப்பட்டதால் தான் தமிழகத்திற்கு இந்த பெருமை கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏர்வாடி, திருக்குறுங்குடி, மாவடி, களக்காடு, சிங்கிகுளம் உள்ளிட்ட பல ஊர்களிலும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் உறுப்பினர், இதை விட பெரிய பதவிக்கு ஆசைப்பட்டதால், இப்போது இடைத்தேர்தல், தொகுதி மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது என்றார். 

நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பெரும் கோடீசுவரர் என்ற முதலமைச்சர் அதிமுகவில்தான் சாமானியர்களும் பதவிக்கு வர முடியும் என்றார்.

மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரசார் தமிழகத்திற்கு செய்த நன்மைகள் என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார். பதவியில் இருக்கும் போது மக்களை பற்றி சிந்திக்காத கட்சிகள் காங்கிரசும் , திமுகவும் என்று அவர் குற்றம் சாட்டினார்.

 அதிமுக ஆட்சி தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக கூறிய முதலமைச்சர், அதிமுகவின் ஒரு எம்.எல்.ஏ.வையோ அல்லது ஒரு தொண்டனையோ கூட அசைக்க முடியாது என்றார். 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணப்படுவதாக கூறிய முதலமைச்சர், இதனால் தான் இந்தியா- சீனா இடையிலான பேச்சுவார்த்தை தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்றது என்றார்.