​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் - தர்மேந்திர பிரதான்

Published : Oct 14, 2019 7:17 PM

பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் - தர்மேந்திர பிரதான்

Oct 14, 2019 7:17 PM

பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பெட்ரோலியத்துறை சிக்கலானது என்பதாலும், மாநில அரசுகள் பெருமளவு அதன் வருவாயை சார்ந்து இருப்பதாலும் ஜிஎஸ்டி வரம்பின் கீழ் பெட்ரோலியப் பொருட்கள் கொண்டு வரப்படவில்லை என்றார். ஆனால், ஜிஎஸ்டி வரம்பின் கீழ் பெட்ரோலியப் பொருட்களை கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருவதாக அவர் கூறினார்.

அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த கோரிக்கையை நிறைவேற்ற பரிசீலிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த 11 ஆயிரத்து 800 கோடி டாலர் முதலீடு செய்யப்படும் என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.