​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு பேருந்து மோதி வியாபாரி உயிரிழப்பு

Published : Oct 14, 2019 6:49 PM

அரசு பேருந்து மோதி வியாபாரி உயிரிழப்பு

Oct 14, 2019 6:49 PM

சென்னை வடபழனியில் மாநகர பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது அதன் சக்கரத்தில் சிக்கி வியாபாரி உயிரிழந்த சம்பவம் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

சென்னை கே.கே.நகரை சேர்ந்த வியாபாரியான மகேந்திரன் வடபழனியில் இருந்து அசோக் நகர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.

வடபழனி நூறடி சாலை பாலத்திற்கு கீழே சென்றுக் கொண்டிருந்த போது முன்னால் சென்ற மாநகர பேருந்தை முந்தி செல்ல மகேந்திரன் முயற்சித்துள்ளார். அது குறுகிய சாலை என்பதால் முந்தி செல்ல முடியாமல் மகேந்திரன் பிரேக் அடிக்கவே, இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி கீழே விழுந்தது. இதில் மகேந்திரன் மீது பேருந்தின் சக்கரம் ஏறியதால் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக  உயிரிழந்தார்.

பேருந்து சக்கரத்தில் சிக்கி மகேந்திரன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமராவில் பதிவாகியது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பாண்டிபஜார் போலீசார் விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் கருப்பையா மற்றும் நடத்துநர் ஸ்டாலினிடம் விசாரணை மேற்கொண்டனர்.