​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிணற்றில் குளிக்கச் சென்று மண் சரிவில் சிக்கிய சிறுவனை தேடும் பணி தீவிரம்

Published : Oct 14, 2019 5:19 PM

கிணற்றில் குளிக்கச் சென்று மண் சரிவில் சிக்கிய சிறுவனை தேடும் பணி தீவிரம்

Oct 14, 2019 5:19 PM

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கிணற்றில் குளிக்கச் சென்று மண் சரிவில் சிக்கிய சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கெங்குலுகண்டிகை கிராமத்தை சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவன் சந்தோஷ் நண்பர்கள் 3 பேருடன் அங்குள்ள கிணறு ஒன்றில் குளிக்கச் சென்றுள்ளார்.

100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகக் கூறப்படும் அந்தக் கிணற்றின் சுற்றுச்சுவர் மிகவும் பலவீனமாக இருந்த நிலையில், திடீரென சரிந்து விழுந்திருக்கிறது. இதில் சந்தோஷ் மட்டும் சிக்கிய நிலையில், மற்ற மூன்று சிறுவர்களும் லேசான காயங்களுடன் தப்பினர்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், சிறுவனை மீட்கப் போராடி வருகின்றனர். ஜேசிபி இயந்திரம் கொண்டு மண்ணை எடுக்க எடுக்க மீண்டும் மண் சரிவு ஏற்படுவதால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.