​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புகாரளித்தவர் பிரதமரின் சகோதரர் மகள் என தெரியாது - டெல்லி போலீசார்

Published : Oct 14, 2019 12:17 PM



புகாரளித்தவர் பிரதமரின் சகோதரர் மகள் என தெரியாது - டெல்லி போலீசார்

Oct 14, 2019 12:17 PM

கைப்பை திருடப்பட்டது குறித்து புகாரளிக்க வந்தபோது தமயந்தி பென், பிரதமர் மோடியின் சகோதரர் மகள் என்பது தங்களுக்குத் தெரியாது என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்தி மோடியின் சகோதரர் பிரகலாத் மோடியின் மகள் தமயந்தி பென் மோடி ஆவார். கடந்த சனிக்கிழமை காலை 7 மணிக்கு அமிர்தசரஸில் இருந்து டெல்லி வந்த பின் ஆட்டோ மூலம் குஜராதி சமாஜ் பவன் பகுதிக்கு சென்றிறங்கினார். அப்போது இரு திருடர்கள் தமயந்தி பென் கைப்பையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து தமயந்தி அங்குள்ள காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

கைப்பையில் 2 போன்கள், 56 ஆயிரம் ரூபாய் பணம், முக்கிய ஆவணங்கள் இருந்ததாகவும், அன்று மாலை தான் அகமதாபாத்துக்கு விமானப் பயணம் மேற்கொள்ளவிருப்பதையும் குறிப்பிட்டார். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி உதவியோடு குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்தனர்.

கைப்பையில் இருந்த 56 ஆயிரம் ரூபாய் பணம், முக்கிய ஆவணங்கள் 2 மொபைல் போன்களை மீட்டதோடு, திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதனிடையே, புகாரளித்த பெண் தான் பிரதமர் மோடி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றோ, பிரதமர் மோடியின் சகோதரர் மகள் என்றோ தங்களிடம் கூறவில்லை என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.