​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேதபாறை அருகே நீர் தேக்கம் கட்ட பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை

Published : Oct 14, 2019 11:01 AM

வேதபாறை அருகே நீர் தேக்கம் கட்ட பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை

Oct 14, 2019 11:01 AM

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே நீர் தேக்கம் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வனப்பகுதிகளிலிருந்து காட்டாறு மூலம் வெளியேறும் மழை வெள்ளம் வேதபாறை ஓடை வழியாக பவானி ஆற்றில் கலக்கிறது. இந்த நிலையில் கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், பகவதிநகர், துறையம்பாளையம் உள்ளிட்ட10க்கும் மேற்பட்ட ஊராட்சியைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பயனடைவும் வகையில் வேதபாறையில் நீர் தேக்கம் கட்ட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.

அணை கட்டுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு ஒப்புதல் அளித்து 64 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அளவீட்டுப்பணிகள் முடிவடைந்தநிலையில் இதுகுறித்து கடந்த மாதம் வரை ஆய்வு மேற்கொண்ட மத்தியக்குழு, அணை கட்ட பரிந்துரை செய்யவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்போது மழை பெய்து வரும் நிலையில் சுமார் ஒரு டி.எம்.சி.க்கு மேற்பட்ட தண்ணீர் வீணாவதாக வேதனை தெரிவித்துள்ளனர். இதற்கு தீர்வாக போர்கால அடிப்படையில் வேதபாறை நீர்த்தேக்க அணையை கட்ட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுற்றுவட்டார விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.