​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
5 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார் நெதர்லாந்து மன்னர்

Published : Oct 14, 2019 10:27 AM

5 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார் நெதர்லாந்து மன்னர்

Oct 14, 2019 10:27 AM

இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் - ராணி மேக்சிமாவுக்கு, குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 5 நாள் பயணமாக நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் - ராணி மேக்சிமாக ஆகியோர் இந்தியா வந்துள்ளனர்.

இன்று காலை, குடியரசு தலைவர் மாளிகையில், நெதர்லாந்து மன்னருக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர், நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் - ராணி மேக்சிமாவை வரவேற்றனர்.

டெல்லியில் தலைவர்களை சந்தித்து பேசும் நெதர்லாந்து மன்னர், பின்னர் அங்குள்ள முக்கிய இடங்களை பார்வையிட்ட பின்னர், மும்பைக்கு பயணாகிறார். மும்பையைத் தொடர்ந்து, கேரள மாநிலத்திற்குச் செல்லும் நெதர்லாந்து மன்னர், அங்கு, தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார். இந்தியாவில் அதிக முதலீடு செய்யும் நாடுகளில், 5ஆவது நாடாக நெதர்லாந்து திகழ்கிறது.

இந்தியா-நெதர்லாந்து இடையை, ஆண்டொன்றுக்கு, சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெறுகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில், அதிகளவில் முதலீடு செய்யும் நாடுகளில் ஒன்றாக நெதர்லாந்து திகழ்வதால், அந்நாட்டு மன்னரின் வருகை, முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியிருக்கிறது.