​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நேபாளம் -சீனா இடையே சுரங்க ரயில்,சாலை அமைக்க திட்டம்

Published : Oct 14, 2019 7:35 AM

நேபாளம் -சீனா இடையே சுரங்க ரயில்,சாலை அமைக்க திட்டம்

Oct 14, 2019 7:35 AM

நேபாளத்தில் சுரங்க ரயில் அமைப்பது உள்ளிட்ட சில ஒப்பந்தங்களில் சீனா கையெழுத்திட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங் நேபாளத்திற்கு சென்றார். காட்மண்டுவில் நேபாள அதிபர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் பேச்சு நடத்தியதை அடுத்து பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இதில் திபெத்தில் உள்ள கைரானிலிருந்து (gyiron) காட்மண்ட் வரை சுமார் 70 கிலோமீட்டருக்கு சுரங்க ரயில் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதற்கான தொடக்க ஆய்வுகளை சீனாவைச் சேர்ந்த அதிகாரிகள், தொழில்நுட்பக் குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

இதே போன்று 28 கிலோமீட்டர் தூரத்திற்கு காட்மண்டுவில் இருந்து சீன எல்லைவரை சாலை போக்குவரத்துக்கான சுரங்கப் பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நேரமும் செலவும் குறையும் என்று கூறப்படுகிறது.