​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பணி நீக்கம் செய்யப்பட்ட 48 ஆயிரம் பேரை மீண்டும் பணியில் அமர்த்த முடியாது

Published : Oct 14, 2019 6:32 AM

பணி நீக்கம் செய்யப்பட்ட 48 ஆயிரம் பேரை மீண்டும் பணியில் அமர்த்த முடியாது

Oct 14, 2019 6:32 AM

தெலங்கானாவில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் 9 வது நாளை எட்டியுள்ள நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 48 ஆயிரம் பேரை மீண்டும் பணியில் அமர்த்த முடியாது என அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்து ஊழியர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய அவர், ஊழியர்களின் இத்தகைய போராட்டத்தைக் கண்டு தாம் அஞ்சப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

பேருந்துகளைத் தடுத்தல், கல் வீசுதல் போன்ற சம்பவங்களை தனது அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஸ்ரீனிவாச ரெட்டி என்பவர் தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவம் போக்குவரத்து ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.