​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவும் சீனாவும் முதிர்ச்சி பெற்ற நாடுகள் - சீன வெளியுறவுத்துறை

Published : Apr 30, 2018 3:22 PM

இந்தியாவும் சீனாவும் முதிர்ச்சி பெற்ற நாடுகள் - சீன வெளியுறவுத்துறை

Apr 30, 2018 3:22 PM

இந்தியாவும் சீனாவும் அமைதியாகப் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளும் முதிர்ச்சியைப் பெற்றிருப்பதாக, சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

சீனாவின் ஊகான் நகரில் அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கும், இந்திய பிரதமர் மோடியும் சந்தித்து விரிவான பேச்சு நடத்தினர். இதுகுறித்து சீனவெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு தலைவர்களிடையேயான பேச்சில் விரிவான கருத்தொற்றுமை எட்டப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தியா-சீனா இடையே பல்வேறு நிலைகளில் தகவல் தொடர்பை பராமரிக்க ஜின்பிங்கும் மோடியும் ஒப்புக் கொண்டதாகவும், தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை உரிய முறையில் கையாளும் முதிர்ச்சி இரு தலைவர்களுக்கும் இருப்பதாகவும் சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. உலக அளவிலான நிலைத்தன்மைக்கும் அமைதிக்கும், தலா நூறுகோடிக்கும் அதிக மக்கள் தொகையை கொண்ட இந்தியா-சீனா இடையேயான அமைதியான நிலையான உறவு முக்கிய காரணி என்றும் கூறப்பட்டுள்ளது.