​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலகளவில் நடைபெறும் அதிவேக சோலார் கார் பந்தயம்

Published : Oct 13, 2019 4:41 PM

உலகளவில் நடைபெறும் அதிவேக சோலார் கார் பந்தயம்

Oct 13, 2019 4:41 PM

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டி நகரில் நடைபெற்ற அதிவேக சோலார் கார் பந்தயத்தில் 24 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான அடிலெய்டில் ஆண்டிற்கு இருமுறை நடத்தப்படும் அதிவேக சோலார் கார் பந்தயம் முதன் முதலாக 1987ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஆயிரம் வாட் மின்திறனுடன் இயங்கும் அதிவேக திறன் கொண்ட கார்கள் 50 மணி நேரத்திற்குள் டார்வினிலிருந்து அடிலெய்டை அடைய வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான கார் பந்தயத்தில் டார்வினில் இருந்து புறப்பட்ட முன்னணி அணியான டச் சோலார் ரேசிங் அணி முதல் நாள் போட்டியில் சக அணிகளுக்கு மிகுந்த நெருக்கடியை தந்தது மட்டுமில்லாமல் முன்னிலை பெற்றது.

அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட இரண்டு மற்றும் மூன்றாம் நிலை அடைந்த அணிகள் ஆஸ்திரேலியா வழியாக ஸ்வீடனையும், நெதர்லாந்து மற்றும் ஜப்பானில் இருந்து அமெரிக்காவையும் அடைய வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் தினமும் மாலை ஐந்து மணிக்குள் அவர்கள் தங்கள் பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது போட்டியின் நிபந்தனை.

முதல் நாள் முடிவில் சோலார் டீம் டிவெண்டி முன்னிலை வகித்த நிலையில் முன்னணி அணிகளான டச், பெல்ஜியன்ஸ் அகோரியா சோலார், வாட்டன்ஃபால் அணிகள் வெளியேறின. இந்த போட்டியில் பங்கேற்கும் சோலார் கார்கள் சூரிய ஒளியை பயன்படுத்தி மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்.