​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கலை நகரமான மாமல்லபுரம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது-அமைச்சர் ஜெயக்குமார்

Published : Oct 13, 2019 2:52 PM

கலை நகரமான மாமல்லபுரம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது-அமைச்சர் ஜெயக்குமார்

Oct 13, 2019 2:52 PM

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நிகழ்ச்சிக்குப்பின்கலை நகரமான மாமல்லபுரம் உலக கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து சீன அதிபரை வரவேற்றது வரவேற்க தக்கது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமென்றாலும் கருத்துக்கூறலாம் என்றார்.

பிகில் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் ஜனநாயக ரீதியாக கருத்து தெரிவித்தார் என்றும் அதற்கு ஜனநாயக முறைப்படி பதிலளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.