​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் நரேந்திர மோடியை போல் நீதிமன்ற வளாகத்தை சுத்தம் செய்த நீதிபதி

Published : Oct 13, 2019 2:32 PM

பிரதமர் நரேந்திர மோடியை போல் நீதிமன்ற வளாகத்தை சுத்தம் செய்த நீதிபதி

Oct 13, 2019 2:32 PM

பிரதமர் நரேந்திர மோடி தனது கைகளால் மகாபலிபுரம் கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றியது போல் தெலுங்கானா நீதிபதி ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் தூக்கி வீசி எறியப்பட்ட டீக்கப்புகளை அகற்றி சுத்தம் செய்துள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பின் உடனான சதிப்பை ஒட்டி தமிழகத்தில் வருகை தந்த பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை காலை மாமல்லபுரம் கடற்கரை ஓரங்களில் இருந்த குப்பைகளை கைகளால் அகற்றினார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதனிடையே, தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் பஞ்சாப் மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதற்காக கடந்த வெள்ளிக்கிழமை மாலை பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நீதிபதி சல்லா கொண்டாரம் உட்பட சக நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

விழாவில் பங்கேற்றவர்களுக்கு பேப்பர் கப்புகளில் தேனீர் விருந்து அளிக்கப்பட்டது. அப்போது, குப்பைத்தொட்டி சற்று தூரத்தில் இருந்ததால் தேனீர் அருந்திய சிலர் கப்புகளை நீதிமன்ற வளாகத்தில் உள்ள புல்வெளியில் தூங்கி எறிந்தனர்.

இதனை கவனித்த நீதிபதி சல்லா கொண்டாரம் அங்கு சென்று புல்தரையில் வீசப்பட்ட கப்புகளை தனது கைகளால் எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டதுடன், ‘ ஜெய் ஸ்வட்ச் பாரத்’ என்ற முழக்கத்தையும் எழுப்பினார். நீதிபதயின் செயலை பார்த்த பிற வழக்கறிஞர்கள் தாங்களும் முன்வந்து புல்தரையில் வீசப்பட்ட கப்புகளை எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டனர். இந்த நிகழ்வை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போனில் பதிவு செய்தனர்.