​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
3,200 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர்

Published : Oct 13, 2019 2:22 PM

3,200 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர்

Oct 13, 2019 2:22 PM

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 3 டன் கடல் அட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்பட இருப்பதாக மண்டபம் வனத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் மன்னார் வளைகுடா பிராந்தியத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நாட்டுப்படகை வனத்துறையினர் சோதனை செய்தனர்.

அதில் 261 மூட்டைகளில் 3200 கிலோ கடல் அட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது. ரோந்து படகை பார்த்ததும் கடலில் குதித்து தப்பிக்க முயன்ற இருவரையும் வனத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கடல் அட்டைகளையும், நாட்டுப்படகையும் பறிமுதல் செய்த போலீஸார், கைது செய்யப்பட்ட இருவரையும் மண்டபம் வனத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் வேதாளை பகுதியை சேர்ந்த சாஹூல் ஹமீது மற்றும் கருப்பையா என்பது தெரியவந்துள்ளது.