​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அழகு மிளிரும் மாமல்லபுரம்.. படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..!

Published : Oct 13, 2019 1:59 PM

அழகு மிளிரும் மாமல்லபுரம்.. படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..!

Oct 13, 2019 1:59 PM

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்புக்காக செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடுகளால் அழகு மிளிரக் காட்சியளிக்கும் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இன்று விடுமுறை நாள் என்பதால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி முதலே சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுத்துக்கொண்டு சுற்றுலா மையங்களுக்கு வெளியே காத்திருந்த நிலையில் ஐந்துரதம், கடற்கரைக் கோவில் உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் அனுமதிக்கப்பட்டனர்.

வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது. 

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொண்ட இடங்களில் மக்களும் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர். 

இதனிடையே மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலில் உள்ள தலசயனப் பெருமாள் மற்றும் சிவலிங்கம் சிலைகள் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பின் சுற்றுலா பயணிகள் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

மாமல்லபுரம் சுற்றுலா மையங்களில் ஆக்கிரமிப்புக் கடைகள், குப்பைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டு சுற்றுலாத் தலங்கள் போல பொலிவுடன் காட்சியளிப்பதாக கூறும் சுற்றுலா பயணிகள் இந்த நிலை தொடர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.