​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடி மாமல்லபுரம் கடற்கரையில் கையில் வைத்திருந்த உருளை பொருள் என்ன? -பிரதமர் மோடி விளக்கம்

Published : Oct 13, 2019 12:05 PM

பிரதமர் மோடி மாமல்லபுரம் கடற்கரையில் கையில் வைத்திருந்த உருளை பொருள் என்ன? -பிரதமர் மோடி விளக்கம்

Oct 13, 2019 12:05 PM

மாமல்லபுரம் கடற்கரையில், நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது தாம் கையில் வைத்திருந்த பொருள், அக்கு பிரசர் உருளை என்று பிரதமர் நரேந்திரமோடி விளக்கம் அளித்துள்ளார். 

சீன அதிபர் ஸீ ஜின்பிங் உடனான சந்திப்புக்காக காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் சென்றிருந்த மோடி, நேற்று காலை கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து பிரதமர் மோடி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

பிரதமர் மோடியின் இந்தச் செயல், சமூக வலைத்தளங்களில் பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், நடைபயிற்சியின் போது அவர் கையில் வைத்திருந்த பொருள் குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்தது.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், தாம் கையில் வைத்திருந்த பொருள் தொடர்பாக நேற்று முதல் பலரும் கேட்டிருந்ததாகவும், அது அக்கு பிரசர் உருளை என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

அக்குபிரசர் உருளையை தாம் அடிக்கடி பயன்படுத்துவதாகவும், அது தமக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும் மோடி கூறியுள்ளார். அக்குபிரசர் என்பது உடல் ஆற்றல் நாளங்களை தூண்டுவதன் மூலம் நோய்களுக்கு தீர்வு காணும் பாரம்பரிய சீன மருத்துவ முறை என்பது குறிப்பிடத்தக்கது.