​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குர்துக்கள் பகுதியில் துருக்கி ஆதரவுப் படை..!

Published : Oct 13, 2019 7:29 AM

குர்துக்கள் பகுதியில் துருக்கி ஆதரவுப் படை..!

Oct 13, 2019 7:29 AM

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் துருக்கி தனது விமானத் தாக்குதலையும், பீரங்கி தாக்குதலையும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், எல்லையில் குர்துக்கள் கட்டுப்பாட்டில் உள்ள ராஸ் அல் அயின் (Ras al Ain) நகருக்குள் துருக்கி ஆதரவு கிளர்ச்சி படை நுழைந்துள்ளது.

சிரியா எல்லையில் இருக்கும் குர்துக்கள் தன்னாட்சி பகுதியில் நிறுத்தியிருந்த அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவதாக அந்நாட்டின் அதிபர் டிரம்ப் திடீரென அறிவித்தார். இதையடுத்து கடந்த புதன்கிழமை துருக்கி ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. தால் அப்யாத் (Tal Abyad), ராஸ் அல் அயின் நகரங்களை குறிவைத்து தாக்குதலை தொடங்கியது.

இந்நிலையில் ராஸ் அல் அயின் ( Ras al Ain) நகருக்குள் துருக்கி ஆதரவு கிளர்ச்சி படை நுழைந்தது. அவர்களுடன் குர்து படையினர் சண்டையிட்டு வருகின்றனர். துருக்கியின் நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், அரேபிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.

துருக்கி மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் எச்சரித்துள்ளன. இதற்கு பதிலளித்துள்ள துருக்கி அதிபர் எர்டோகன், ராணுவ நடவடிக்கையை ஆக்கிரமிப்பாக கருதினால் ஐரோப்பாவுக்குள் 36 லட்சம் அகதிகளை அனுப்பி வைப்போம் என்று எச்சரித்துள்ளார்.