​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொது இடங்களை தூய்மையாகவும், நேர்த்தியாகவும் வைத்துக்கொள்வோம் என பிரதமர் மோடி அழைப்பு

Published : Oct 13, 2019 7:17 AM

பொது இடங்களை தூய்மையாகவும், நேர்த்தியாகவும் வைத்துக்கொள்வோம் என பிரதமர் மோடி அழைப்பு

Oct 13, 2019 7:17 AM

மாமல்லபுரம் கடற்கரையில் நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றினார். எழில்மிகு கடற்கரையில், புத்துணர்ச்சியூட்டும் நடைப் பயிற்சியும், உடற்பயிற்சியும் மேற்கொண்டதாகவும் ட்விட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கடற்கரையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றித் தூய்மைப் பணியில் ஈடுபட்ட வீடியோவையும் பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருவது சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தாக மாறியதைத் தொடர்ந்து, பிளாகிங் எனப்படும் நடைமுறை பரவி வருகிறது. அதன்படி மாமல்லபுரம் கடற்கரையில் நடைப் பயிற்சி மேற்கொண்டபடியே 30 நிமிடம் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றியதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பொது இடங்கள் தூய்மையாகவும் நேர்த்தியாகவும் இருப்பதை உறுதி செய்வோம் என்றும், உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதை உறுதிசெய்வோம் என்றும் பிரதமர் பதிவிட்டுள்ளார்.