​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாலக்காடு - சென்னை விரைவு ரயிலில் தவித்த பயணிகள்

Published : Oct 13, 2019 7:01 AM

பாலக்காடு - சென்னை விரைவு ரயிலில் தவித்த பயணிகள்

Oct 13, 2019 7:01 AM

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டியில் மின்சார கோளாறை சரி செய்யாததை கண்டித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலக்காட்டில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் பொள்ளாச்சி அருகே வந்தபோது, ரயில்பெட்டி ஒன்றில் மின்விசிறி மற்றும் டியூப்லைட் எரியாததால் அது குறித்து டிக்கெட் பரிசோதகரிடம் பயணிகள் புகார் தெரிவித்தனர்.

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சரிசெய்யப்படும் என அவர் உறுதி அளித்த நிலையில், அங்கிருந்து ரயிலை இயக்க முற்பட்டபோது பயணிகள் ரயிலை நிறுத்தி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மின்சாரக் கோளாறு சரிசெய்யப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக சென்னைக்குப் புறப்பட்டது.